மகளுக்கு மாட்டு சாணத்தால் கோட்டிங் செய்யப்பட்ட காரை பரிசளித்த மருத்துவர்! கூறிய காரணத்தை பார்த்தீர்களா!

மகளுக்கு மாட்டு சாணத்தால் கோட்டிங் செய்யப்பட்ட காரை பரிசளித்த மருத்துவர்! கூறிய காரணத்தை பார்த்தீர்களா!



doctor-gift-cow-shed-coating-car

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் டாக்டர் நவ்நாத் டுதால்.  இவரது மகளுக்கு சமீபத்தில் மிகவும் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் தனது மகள் திருமணத்தில் வித்தியாசமாக ஏதாவது ஒரு பொருளை பரிசளிக்க வேண்டும் என எண்ணிய டாக்டர் மாட்டு சாணத்தால் கோட்டிங் செய்யப்பட்ட கார் ஒன்றை பரிசாக கொடுத்து அசத்தியுள்ளார். 

மேலும் அந்த காரிலேயே மணமக்களுக்கு திருமண வரவேற்பும் நடந்துள்ளது. திருமணவிழாவில் இந்த காரை கண்ட அனைவரும் பெரும் ஆச்சரியத்தில் மூழ்கி போனர். இந்நிலையில் காரை மாட்டுச் சாணத்தால் கோட்டிங் செய்தது குறித்து டாக்டர் கூறியுள்ள காரணங்கள் பெரிதும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

cow shed

அவர் கூறியதாவது, உலக சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் பசுக்களின் பங்கு பெரிதளவில் உள்ளது. மேலும் மாட்டுச் சாணத்தால் கேன்சரை கூட குணப்படுத்த முடியும். மேலும் மனித உடலில் உள்ள நோய்களை அகற்றும் திறன் இந்த மாட்டு சாணத்திற்கு உள்ளது. 

 நாளுக்கு நாள் உலக வெப்பமயமாதலின் ஆபத்துக்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நிலையில் காரை மாட்டு சாணத்தால் கோட்டிங் செய்தால் காரின் உள்ளே வெப்பநிலை குறையும். மேலும் செல்போன் கதிர்வீச்சுக்கள் நம்மை அதிக அளவில் தாக்காமல் பாதுகாக்க முடியும்.  மேலும் மாட்டுச்சாணம் கோட்டிங்கால் கார் கழுவும் தண்ணீரின் அளவும் மிகக் குறையும் என்று கூறியுள்ளார்.