இந்த மனசு தான் சார் கடவுள்... நோயாளிக்கு தானே ரத்தம் கொடுத்து, அறுவை சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்.!

இந்த மனசு தான் சார் கடவுள்... நோயாளிக்கு தானே ரத்தம் கொடுத்து, அறுவை சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றிய மருத்துவர்.!


doctor donate blood and surgery to patient

மருத்துவ தொழில் மிக உயர்ந்த உன்னதமான தொழிலாக கருதப்பட்டாலும், மருத்துவர்களை கடவுளுக்கு நிகராக நோயாளிகள் கருதினாலும், இந்த உணர்வை, கொவிட்-19 இன்னும் அதிகமாக்கியுள்ளது. தங்கள் உயிருக்கு ஏற்படும் அபாயத்தை மருத்துவர்கள் அறிந்தே கொரோனாவிற்கு எதிராக செயல்பட்டு வெற்றிகளையும் கண்டனர்.

இந்தநிலையில் ஜார்க்கண்ட் மாநிலம் டேராடூன் நகரில் உள்ள டூன் மருத்துவ கல்லூரிக்கு நோயாளி ஒருவரை சிகிச்சைக்கு சேர்த்து உள்ளனர். அவர் ஆழமுள்ள குழி ஒன்றில் தவறி விழுந்ததில், மார்பு, இடது கை மற்றும் தொடை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து 3 நாட்கள் அவர் அவசர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். 

இதனையடுத்து, அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். ஆனால், போதிய அளவுக்கு ரத்தம் இல்லாத நிலையில், அறுவை சிகிச்சை செய்வது தள்ளி போனது. இதனால், அந்நபரின் மகள் ரத்தம் கொடுக்க முன் வந்துள்ளார். ஆனால், சில சுகாதார விசயங்களால் அந்த மகளால் ரத்தம் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. 

இந்த நிலையில், அறுவை சிகிச்சை நிபுணரான ஷஷாங் சிங் என்ற மருத்துவர் அந்த நபருக்கு ரத்தம் கொடுக்க முடிவு செய்துள்ளார். அதன்பின்னர், அவரே அறுவை சிகிச்சையும் செய்து அந்நபரை காப்பாற்றி உள்ளார். அந்த மருத்துவருக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.