இந்தியா மருத்துவம்

தீவிரமாக பரவிவரும் கொரோனா! பொதுமக்களுக்காக கஷ்டப்படும் மருத்துவர் என்ன சொல்லி இருக்கிறார் பாருங்கள்.!

Summary:

doctor adviced to public


சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸ் இன்று பல நாடுகளிலும் பரவி உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. அதிலும் தற்போது இந்தியாவில் மிக வேகமாக பரவி வருகிறது. இதுவரை இந்நோயால் 150க்கும் மேற்ப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க உலக அளவில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளன. அதேபோல் மக்களும் வெளிப்பயணகளை தவிர்க்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டு ஏற்கனவே மூன்று பேர் உயிரிழந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரும் இன்று உயிரிழந்துள்ளார்.

கொரோனாவை ஒழிக்க நாட்டில் உள்ள அணைத்து மருத்துவர்களும் பம்பரம் போல செயல்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர் அம்ரிந்தர் சிங் என்பவர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்தது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கையில் வைத்திருக்கும் போஸ்டரில், "நாங்கள் உங்களுக்காக தீவிர பணியில் இருக்கின்றோம், எனவே எங்களுக்காக நீங்கள் அனைவரும் வெளியில் செல்வதை தவிர்த்து வீட்டிலே இருங்கள்" என பதிவிட்டுள்ளார். 


Advertisement