இந்தியா

கொரோனா தனி வார்டில் இருந்த கர்ப்பிணி பெண்..! தனிமையில் வைத்து 2 நாட்களாக கற்பழித்த டாக்டர்..! பதற வைக்கும் சம்பவம்!

Summary:

Doctor abused woman in Corona isolation ward

கொரோனா சந்தேகத்தின் பேரில் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கர்ப்பிணி பெண் மருத்துவரால் இரண்டு நாட்களாக தொடர்ந்து கற்பழிக்கப்பட்டுவந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் கொரோனா சந்தேகத்தின் பேரில் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவருக்கு சிகிச்சை வழங்கப்படுவந்துள்ளது. சிகிச்சை தொடங்கிய நாளில் இருந்தே மருத்துவமனையில் உள்ள மருத்துவர் ஒருவர் அந்த பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.

வெளியே கூறினால் குடும்ப மானம் போய்விடும் என்பதால் அவர் வெளியே கூறவில்லை என கூறப்படுகிறது. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட மருத்துவர் அந்த பெண்ணை இரண்டு நாட்களாக தொடர்ந்து பலமுறை கற்பழித்துள்ளார். இதனிடையே அந்த பெண்ணுக்கு கொரோனா இல்லை என சோதனை முடிவுகள் வந்தது அடுத்து அவர் வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளார். வீட்டிற்கு சென்ற அந்த பெண்ணிற்கு தொடர்ந்து இரத்த போக்கு ஏற்பட்டுள்ளது.

அந்த பெண் ஏற்கனவே இரண்டு மாதம் கர்ப்பமாக இருந்ததாக கூறப்படும் நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை நடைபெற்றது. ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிர் இழந்துள்ளார்.

இறப்பதற்கு முன் மருத்துவர் தன்னை பலமுறை கற்பழித்ததை அந்த பெண் உறவினர்களிடம் கூறியதை அடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள் சம்மந்தப்பட்ட மருத்துவமனையின் உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர். மேலும், சம்மந்தப்பட்ட மருத்துவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பலதரப்பில் இருந்து கோரிக்கை எழுந்துவருகிறது.


Advertisement