இந்தியா

இப்படியே போனால் ஒன்றுகூட மிஞ்சாது.. தோனி வெளியிட்ட வீடியோ.. இணையத்தில் செம வைரல்..

Summary:

கிரிக்கெட் வீரர் தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

கிரிக்கெட் வீரர் தோனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட் போட்டிங்களில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தல தோனி தற்போது விவசாயம் செய்வதில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக ராஞ்சியில் இருக்கும் தனது வீட்டில் 10 ஏக்கரில், பிரேத்யமாக நிலத்தை ஒதுக்கி விவசாயம் செய்து வருகிறார்.

அந்த விவசாய நிலத்தில் தக்காளி, முட்டைக்கோஸ், பட்டாணி, ஸ்டராபெரி  போன்றவற்றை விளைவிக்கிறார். இந்நிலையில் தோனி தனது விவசாய நிலையத்திற்கு சென்று, அங்கு பயிரிடப்பட்டு காய்துகிடக்கும் ஸ்ட்ராபெரி ஒன்றை பறித்து சாப்பிடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும், "தினமும் நான் பண்ணைக்குச் சென்றால், விற்பனைக்காக மார்கெட்டிற்கு எடுத்துச்செல்ல ஒரு ஸ்ட்ராபெரி கூட மிஞ்சாது" என பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த வீடியோ.


Advertisement