டெல்லி வன்முறை! நிறைமாத கர்ப்பிணி என பாராமல் மர்ம கும்பல் செய்த காரியம்! இறுதியில் நேர்ந்த அதிசயம்!

டெல்லி வன்முறை! நிறைமாத கர்ப்பிணி என பாராமல் மர்ம கும்பல் செய்த காரியம்! இறுதியில் நேர்ந்த அதிசயம்!


delhi violence pregnant lady attacked by people

டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டம் கலவரமாக மாறியது. இதனால் டெல்லி முழுவதும் கலவரபூமியாக மாறியுள்ளது. கடைகள் அடித்து நொறுக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டுள்ளது, பொதுமக்கள் தாக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த கலவரத்தால் இதுவரை 35க்கும் அதிகமான பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லி வடகிழக்கு பகுதியில் கராவல் நகர் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தவர் ஷபானா பர்வீன்.30 வயது நிறைந்த அவர் இரு குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டிலுள்ள அனைவரும் தூங்கிய நிலையில், நள்ளிரவில் வேகமாக கதவை உடைக்கும் சத்தம் கேட்டுள்ளது.

delhi violence

 மேலும் அப்பொழுது உள்ளே வந்த மர்ம கும்பல் ஒன்று வீட்டில் உள்ள அனைவரையும் கண்மூடித்தனமாக அடித்து கடுமையாக தாக்கியுள்ளது. மேலும் கர்ப்பிணிப் பெண் என்று கூட பாராமல் பர்வீன் அடிவயிற்றில் நபரொருவர் காலால் ஓங்கி மிதித்துள்ளார். இதில் பர்வீன் வலி தாங்க முடியாமல் கதறி துடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து அந்த கும்பல் கிளம்பிய நிலையில் குடும்பத்தினர் கதறி அழுதுகொண்டே பர்வீனை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஒட்டியுள்ளனர்.

மேலும் நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவி வலியால் துடிப்பதை கண்டு அவரது கணவர் கதறி துடித்துள்ளார். பின்னர் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றநிலையில், அதிசயமாக எந்த பாதிப்பும் இன்றி அழகிய ஆண் குழந்தை பிறந்தது. மேலும் தாய்க்கும் சேய்க்கும் எந்த ஆபத்தும் இல்லாமல் குழந்தை  நலமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

delhi violence

இந்நிலையில் இது குறித்து பர்வீனின் மாமியார் நஷிமா  கூறுகையில், நிறைமாத கர்ப்பிணி என்று கூட பாராமல் சிலர் எனது மருமகளை அடிவயிற்றில் ஓங்கி  உதைத்தார்கள். மேலும் எங்களையும் அடித்து கடுமையாக தாக்கினர். அந்த இரவை நாங்கள் தாண்டவே மாட்டோம் என்று நினைத்தோம். அதிசயமாக எந்த ஆபத்தும் இன்றி குழந்தை பிறந்தது மகிழ்ச்சியாக உள்ளது என கூறியுள்ளார்.