பெற்றோர்களே கவனம்.. செல்போனால் வாழ்க்கையை தொலைத்த இளைஞர்.. படுத்த படுக்கையான சோகம்.!!
ஸ்மார்ட் ஃபோன்களை வைத்து பலரும் தங்களது வாழ்க்கையில் முன்னேறும் பணிகளை செய்து வந்தாலும், ஒரு சிலர் அதனை முழு நேர பொழுதுபோக்காக எடுத்துக்கொண்டு தங்களது வாழ்க்கையை இழந்து வருகின்றனர்.
வாழ்க்கையை இழந்த இளைஞர்
இந்நிலையில் டெல்லியை சார்ந்த 19 வயது இளைஞர், ஒரு நாளைக்கு குறைந்தது 12 மணி நேரத்திற்கு மேல் செல்போனிலேயே செலவிட்ட காரணத்தால் கடுமையான முதுகு தண்டுவட பாதிப்பை எதிர்கொண்டு படுத்த படுக்கையாகி இருக்கிறார்.
இதையும் படிங்க: எனக்கு கள்ளக்காதலி., அவனுக்கு பொண்டாட்டியா? பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசிய பயங்கரம்.!!

உடல்நல பாதிப்பு
மேலும் அவர் சிறுநீரக கோளாறையும் எதிர்கொண்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் குடும்பத்தினர் என்ன செய்வது? என தெரியாமல் தொடர்ந்து மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டு வருகின்றனர்.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
செல்போனின் காரணமாக மன அழுத்தம், மூளை ஓய்வின்மை, கண்பார்வை குறைபாடு போன்றவற்றையும் எதிர்கொண்டுள்ள இளைஞர் தற்போது தீவிர மருத்துவ சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: வீடியோ காலில் பாக்., பெண்ணுடன் திருமணம்.. CRPF வீரருக்கு ஷாக் பரிசு கொடுத்த அதிகாரிகள்.!