அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
எனக்கு கள்ளக்காதலி., அவனுக்கு பொண்டாட்டியா? பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசிய பயங்கரம்.!!
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கோவ் மாவட்டத்தில் வசித்து வரும் 25 வயது உடைய இளம்பெண்ணுக்கு 27ஆம் தேதி திருமணம் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 23ஆம் தேதி குடும்பத்தினர் சார்பில் திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சியான பொட்டு வைக்கும் நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆசிட் வீச்சு
இதற்காக பெண்மணி வங்கிக்கு சென்று பணம் எடுக்க முடிவெடுத்துள்ளார். பின் வங்கியில் இருந்து திரும்ப வரும்போது இருசக்கர வாகனத்தில் வந்த சில நபர்கள் அவர்கள் மீது ஆசிட் வீசி தப்பிச் சென்றனர்.
இதையும் படிங்க: உபியில் கொடூரம்... "கோவிலில் இரத்தக்கறை..." 12 வயது தலித் சிறுமி பலாத்காரம்.!! போலீஸ் விசாரணை.!!
60% காயம்
இதில் பெண்ணின் முகம் மற்றும் உடலில் 60% காயம் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஆசிட் ஊற்றும்போது ஒரு நபர் தன்னிடம் எனக்கு கிடைக்காத நீ வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என கூறியதாக தெரிவித்துள்ளார்.

தகாத உறவு
இதனை அடுத்து யார் அந்த நபர்? என்று அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, ஆசிட் வீசியவர் ராம் சிங் ஜனம் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவருக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணுடன் தகாத உறவில் 5 வருடமாக இருந்துள்ளார். பெண்ணுக்கு தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் இந்த விபரீதத்தை செய்ததாக தெரியவந்துள்ளது.
போலீசார் விசாரணை
இதனால் அவரை கைது செய்த காவல்துறையினர், அவருக்கு உடந்தையாக இருந்த சுரேந்திர யாதவ் மற்றும் மனோஜ் யாதவ் உள்ளிட்டோரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வீடியோ காலில் பாக்., பெண்ணுடன் திருமணம்.. CRPF வீரருக்கு ஷாக் பரிசு கொடுத்த அதிகாரிகள்.!