#JUSTIN: பாலியல் தொல்லையால் பதவி ராஜினாமா.. பெண் நீதிபதியை மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவு.!
மத்திய பிரதேசம் மாநிலத்தின் ஜபல்பூரில், அம்மாநில உயர்நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிகளில் ஒருவராக இருந்த பெண் நீதிபதி, தன்னுடன் பணியாற்றி வரும் சக நீதிபதி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறினார்.
இந்த குற்றச்சாட்டு கடந்த 2014 ஆம் வருடம் அம்மாநிலத்தில் மட்டுமல்லாது இந்திய அளவிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பெண் நீதிபதிக்கு பல்வேறு வழிகளில் மிரட்டல் விடுக்கப்பட்டு, அவர் கட்டாய ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார். சில மாதங்களில் பாலியல் தொல்லை புகார் குறித்த பரபரப்பும் அடங்கியது.

இந்த நிலையில், தனது நிலை குறித்து தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் முன்னாள் பெண் நீதிபதி மனுதாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரணை செய்து வந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் அமர்வு, பெண் நீதிபதியை மீண்டும் பணியில் அமர்ந்த நேரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.