இந்தியா

காரின் மீது கவிழ்ந்த லாரி.. அப்பளம் போல நொறுங்கி., குழந்தை கண்முன் உடல்நசுங்கி உயிரிழந்த பெற்றோர்..!

Summary:

லாரி காரின் மீது கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், 6 வயது குழந்தை கண்முன்னே பெற்றோர்கள் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர்.

லாரி காரின் மீது கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், 6 வயது குழந்தை கண்முன்னே பெற்றோர்கள் பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தனர்.

டெல்லி மாநிலத்தில் உள்ள ஆர்.கே புரம் பகுதியில் ஹயாத் ஹோட்டல் உள்ளது. இந்த ஹயாத் ஹோட்டல் அருகே, லாரி ஒன்று காரின் மீது கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தை கண்டு அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள், மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்த பிகைஜீ காமா தீயணைப்பு நிலைய அதிகாரிகள், லாரியை அப்புறப்படுத்தி மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில், லாரியில் பயணித்த 3 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர். 

மேலும், காரில் பெற்றோர்களுடன் 6 வயது குழந்தை பயணம் செய்திருந்த நிலையில், காரின் மீது லாரி விழுந்திருந்த காரணத்தால் பெற்றோர்கள் இருவரும் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர். மேலும், காருக்குள் இருந்த 6 வயது குழந்தை மட்டும் உயிருடன் மீட்கப்பட்டது. 

இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 


Advertisement