இந்தியா

28 கத்தி குத்து..! 25 வயது இளைஞரை நடுரோட்டில் 17 வயது சிறுவர்கள் செய்த கொடூரம்..! பதறவைக்கும் CCTV காட்சி..!

Summary:

Delhi recent murder cctv video goes viral

டெல்லியில் மூன்று சிறுவர்கள் சேர்ந்து 25 வயது இளைஞரை இரவு நேரத்தில் பொதுமக்கள் முன்னிலையில் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு டெல்லியின் ரகுபிர் நகர் என்னும் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 17 வயது சிறுவர்கள் மூன்று பேர் 25 வயது இளைஞர் ஒருவரை பொதுமக்கள் முன்னிலையில், இரவு நேரத்தில் கத்தியை வைத்து சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளனர். இந்த கொலை தொடர்பான காட்சியில் வெளியாகி பார்ப்போரை நடுங்கவைக்கும் விதமாக இருந்தது.

28 கத்தி குதுகளுடன் உயிருக்கு போராடிய அந்த இளைஞரை அந்த பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த இளைஞர் உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக இருந்த மூன்று சிறுவர்களையும் தற்போது கைது செய்துள்ளனர்.

அந்த மூன்று சிறுவர்களில் ஒருவர், கொலை செய்யப்பட்ட இளைஞர் வசிக்கும் பகுதியை சேர்ந்தவர் என்றும், பைக் பந்தயம் மற்றும் ஸ்டண்ட்ஸ் ஆகியவற்றில் அதிகம் ஈடுபட்டு அந்த சிறுவனை, இனி இந்த பகுதியில் பைக் பந்தயம் மேற்கொள்ளக்கூடாது எனக் கூறி கொலை செய்யப்பட்ட இளைஞர் கண்டித்ததால் அவரை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்ததாக அந்த சிறுவன் வாக்குமூலத்தில் கூறியுள்ளான். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement