டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து; 9 பேர் பரிதாப பலி; பதைபதைக்கும் வீடியோ காட்சி.!

டெல்லி ஓட்டலில் பயங்கர தீ விபத்து; 9 பேர் பரிதாப பலி; பதைபதைக்கும் வீடியோ காட்சி.!


delhi private hotel fire accident - 9 dead

டெல்லி நட்சத்திர ஓட்டலில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தலைநகர் டெல்லியின் கரோபாக் பகுதியில் அர்பித் பேலஸ் ஓட்டல் அமைந்துள்ளது. அங்கு இன்று அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. மளமளவென பரவிய தீ, கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. 

delhi

இதுகுறித்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக முதலில் தெரிவிக்கப்பட்டது. தீவிபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 9ஆக உயர்ந்துள்ளது. 

இன்று அதிகாலை வேளையில் ஓட்டலில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீட்கப்பட்டவர்களில் சிலர் காயமடைந்தனர். அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.