இது இப்படியே போனால் அவ்ளோதான்..! டெல்லி முழுமையாக சீரழிந்துவிடும்.! டெல்லி அரசு கொடுத்த ஷாக் தகவல்.!

இது இப்படியே போனால் அவ்ளோதான்..! டெல்லி முழுமையாக சீரழிந்துவிடும்.! டெல்லி அரசு கொடுத்த ஷாக் தகவல்.!



delhi government request to oxygen

நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் தற்போது இரண்டாவது அலையாக வேகமெடுத்து வருகிறது. இந்தியாவில் குறிப்பாக டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மிக தீவிரமாக அதிகரித்து வருகிறது. டெல்லியில் தற்போது மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. 

மத்திய அரசு தொகுப்பில் இருந்து டெல்லிக்கு வரும் ஆக்சிஜன் அளவு என்பது 480 மெட்ரிக் டன்னாக உயர்த்தப்பட்டது. ஆனால் தற்போது அங்கிருந்து வரும் ஆக்சிஜன் அளவு  270, 280 மெட்ரிக் டன் மட்டுமே கிடைப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலைமை தொடர்ந்தால் டெல்லியின் நிலைமை முழுமையாக சீரழிந்துவிடும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.

delhi

இது தொடர்பாக டெல்லி அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், " டெல்லியில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியாத சூழல் காரணமாக நாங்கள் வெளிப்பகுதியில் இருந்துதான் ஆக்ஸிஜன் வாங்கி வருகிறோம். ஆனால் தற்போது அந்த தனியார் நிறுவனங்களும் சில நேரங்களில் ஆக்சிஜன் கொடுப்பதில்லை. 

எனவே டெல்லி மருத்துவமனைகளுக்கு தட்டுப்பாடின்றி ஆக்சிஜன் கிடைக்க மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்க வேண்டும். குறைந்தது 10 ஐஏஎஸ் அதிகாரிகளையாவது ஆக்சிஜன் தட்டுப்பாடு பிரச்னையை கையாள அரசு நியமிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.