வாகனத்தில் ஆணுறை இல்லை என்றால் அபராதம்! புலம்பும் கால்டாக்சி ஓட்டுனர்கள்.

Delhi Cab Drivers Carry Condoms in First-Aid Box


delhi-cab-drivers-carry-condoms-in-first-aid-box

சமீபத்தில் மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் அதிரடி மாற்றங்களை செய்தது. அதன்படி திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம் கடந்த செப்டம்பர் 1 முதல் அமல்படுத்தப்பட்டு தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு இடங்களில் பலவிதமான குற்றங்களுக்காக 86 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தலைநகர் டெல்லியில் காரில் முதல் முதலுதவி பெட்டியில் ஆணுறை இல்லை என்பதற்காக போலீசார் அபராதம் விதிப்பதாக வாகன ஓட்டிகள் புலம்பிவருகின்றனர். மோட்டார் வாகனச் சட்டத்தில் கார்களில் முதலுதவிப் பெட்டியில் ஆணுறை வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை.

Crime

பாதுகாப்பான தாம்பத்தியத்திற்கு மட்டும் இல்லாது காரில் உள்ள குழாய்களில் ஏற்படும் அடைப்பை சரி செய்யவும், விபத்து சமயங்களில் யாருக்கேனும் அடிபட்டு ரத்தம் வந்தால் முதலுதவிக்காகவும் ஆணுறை பயன்படுகிறது.

புதிய மோட்டார் வாகன சட்டத்தில் முதலுதவி பெட்டியில் ஆணுறை வைத்திருக்கவேண்டும் என்று கூறவில்லை என்றாலும் கால் டாக்சியில் ஆணுறை இருப்பது அவசியமானது என்று இதுவரை கடைபிடிக்கப்பட்டு வந்ததால், அதனை வைத்து அபராதம் விதிப்பதாக கால் டாக்சி டிரைவர்கள் புலம்புகின்றனர்.