சாக்கடையை சுத்தம் செய்த ஆம் ஆத்மீ கவுன்சிலருக்கு பாலபிஷேகம்.. குவியும் பாராட்டுக்கள்.!
மக்களின் குறையை கேட்கவந்து, உடனடியாக சாக்கடையில் இறங்கி அதனை சுத்தம் செய்த கவுன்சிலருக்கு பாலபிஷேகம் செய்யப்பட்டது.
டெல்லி மாநிலத்தில் ஆம் ஆத்மீ கட்சியின் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மீ அமோக வெற்றி அடைந்து ஆட்சியை தக்க வைத்தது. விரைவில் டெல்லியில் உள்ளாட்சித்தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கான முதற்கட்ட பணிகளை ஆம் ஆத்மீ கட்சியினர் தொடங்கியுள்ள நிலையில், டெல்லியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் என்று மக்களின் குறைகளை கேட்டு வருகின்றனர். அதனைப்போல, மக்களிடம் குறைகளை கேட்க சென்ற ஆம் ஆத்மீ கவுன்சிலர், சாக்கடை பல நாட்களாக அடைத்துள்ளது என்ற மக்களின் ஆதங்கத்தை கேட்டறிந்தார்.
இதனையடுத்து, சாக்கடைக்குள் குதித்த கவுன்சிலர் அடைப்பை நீக்கும் பணியை முடித்துவிட்டு வெளியே வந்தார். அப்போது, கவுன்சிலரின் செயலை கண்டு நெகிழ்ந்துபோன மக்கள், ஆம் ஆத்மீ கவுன்சிலருக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்தனர். இதனை விடியோவாக பதிவு செய்து இணையத்திலும் பதிவு செய்யவே, அது வைரலாகி வருகிறது. மேலும், கவுன்சிலரின் செயலுக்கு பாராட்டுகளும் குவிகின்றன.