இந்தியா

வேற லெவல்.. தன் மாமனாரை முதுகில் சுமந்து சென்ற மருமகள்! அதுவும் ஏன் தெரியுமா? ஆச்சர்ய சம்பவம்!!

Summary:

அசாம் மாநிலத்தில் கொரோனா பாதித்த மாமனாரை தனது முதுகில் சுமந்து சென்று மருமகள் மருத்துவமனைய

அசாம் மாநிலத்தில் கொரோனா பாதித்த மாமனாரை தனது முதுகில் சுமந்து சென்று மருமகள் மருத்துவமனையில் அனுமதித்த சம்பவம் பலருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது,

அசாம் மாநிலம் ராஹாவில் உள்ள பாட்டிகவானில் வசித்து வருபவர் நிகாரிகா. இவரது கணவர் சூரஜ். இவர் வேலையின் காரணமாக வெளியூர் சென்றுள்ளார். இந்த நிலையில் 75 வயது நிறைந்த சூரஜ்ஜின் தந்தையும், நிகாரிகாவின் மாமனாருமாகிய  துலேஷ்வர் தாஸ்க்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

  

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாததால், உதவிக்கு யாரும் வராததால் நிகாரிகாவே தனது மாமனாரை தன் முதுகில் சுமந்து சென்று அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக  அனுமதித்துள்ளார். இதனையடுத்து நிகாரிகாவுக்கு பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இந்நிலையில் கொரோனா பாதிக்கப்பட்ட தனது மாமனாரை தோளில் சுமந்து சென்று பொறுப்புடன் செயல்பட்ட மருமகளுக்கு நெட்டிசன்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement