இந்தியா

3 மணி நேரம் காத்திருந்த முதலை! ஆற்றில் குளிக்க சென்றவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!

Summary:

ஆற்றில் குளிக்க சென்றவரை முதலை ஒன்று கடித்து குதறி கொன்ற சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆற்றில் குளிக்க சென்றவரை முதலை ஒன்று கடித்து குதறி கொன்ற சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் புல்வாடி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் காந்தி வாசவா. 50 வயதாகும் காந்தி தனது வீட்டின் அருகில் உள்ள ஆர்சாங் ஆற்றுக்கு மாலை 4 மணியளவில் குளிக்க சென்றுள்ளார். அவர் ஆற்றில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தபோது ஆற்றில் இருந்த முதலை ஒன்று காந்தியை தாக்கியுள்ளது.

முதலையின் எதிர்பாராத தாக்குதலால் நிலைகுலைந்துபோன காந்தி அலறி துடித்துள்ளார். காந்தியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அவரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளன்னர். ஆனால் முதலை காந்தியை கொடூரமாக கடித்து ஆற்றின் மறுகரைக்கு இழுத்து சென்றுள்ளது.

Crocodile,river,australia,nature,animal - free image from needpix.com

மேலும் முதலையின் தாக்குதலால் காந்தியின் ஒரு கை துண்டான நிலையில் அவர் உடல்முழுவதும் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முதலையுடன் நடந்த போராட்டத்தில் காந்தி உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்த பிறகும் முதலை அங்கிருந்து செல்லாமல் அவரது உடலின் அருகே சுமார் மூன்று மணிநேரம் இருந்துள்ளது.

பின்னர் முதலை அங்கிருந்து சென்றபிறகு கிராமத்தினர் காந்தியின் உடலை மீட்டுள்ளனர். ஆற்றில் குளிக்க சென்ற நபர் முதல் கடித்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement