இந்தியா

மூன்று பவுன் தங்க செயினை விழுங்கிய மாடு! சாணத்துடன் வந்துவிடும் என காத்திருக்கும் குடும்பம்!

Summary:

cow eat gold chain

ஹரியானா மாநிலத்தில் வீட்டில் வளர்த்த மாடு ஒன்று 30 கிராம் எடை கொண்ட தங்க செயினை விழுங்கியுள்ளது. இதனால் மாட்டின் கழிவில் தங்க செயின் வந்துவிடும் என காத்திருக்கின்றனர்.

ஹரியானா மாநிலத்தில் காலன்வாலி என்ற கிராமம் உள்ளது.அந்த பகுதியில் வசிக்கும் ரவீந்திர பாட் என்ற பெண் வீட்டில் சமையல் வேலையைச் செய்துள்ளார். அப்பொழுது காய்கறி நறுக்கும்போது அவர் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை அருகிலிருந்த காய்கறி பெட்டியில் கழட்டி வைத்துவைத்துள்ளார்.

இந்தநிலையில் தங்க செயினை வைத்ததை மறந்து அதில் காய்கறி கழிவுகளைக் கொட்டி அவர்கள் வீட்டு பின்னால் இருக்கும் மாட்டு தீவின பெட்டியில் போட்டுவிட்டார். இதனையடுத்து மாட்டுத் தீவனத்துடன் தங்க சங்கிலியையும் சேர்த்துச் சாப்பிட்டது தெரியவந்தது.

மாடு சாப்பிட்ட அந்த தங்க செயின் சுமார் 30 கிராம் எடை கொண்ட சுமார் ஒரு லட்சம் மதிப்புடையது என கூறப்படுகிறது. இந்நிலையில் மாட்டிற்கு தீவினம் கொடுத்தால் அதன் கழிவில் தங்க செயின் வந்துவிடும் என நினைத்து அவர்கள் கடந்த 3 நாட்களாக மாட்டிற்குத் தீவனம் வழங்கியுள்ளனர். ஆனால் சங்கிலி வரவில்லை.

இதையடுத்து அவர்கள் கால்நடை மருத்துவரிடம் சென்று இதுகுறித்து கூறியுள்ளனர். மருத்துவர் கூறுகையில், அறுவைசிகிச்சை செய்து மாட்டின் வயிற்றில் உள்ள செயினை அகற்றவேண்டும் ஆனால் அதில் ஆபத்தும் உள்ளது  என மருத்துவர்கள் கூறியதையடுத்து. அந்த செயின் கழிவிலேயே வந்துவிடும் என காத்திருக்கின்றனர்.


Advertisement