அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
"செத்து செத்து விளையாடுவோமா..." கடன் சுமையால் அவமானம்.!! தம்பதி எடுத்த விபரீத முடிவு.!!
ஆந்திர மாநிலத்தில் கடன் தொல்லையால் தவித்து வந்த தம்பதியினர் ஒருவரை ஒருவர் மாறி மாறி கத்தியால் குத்திக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தில் கணவன் உயிரிழந்த நிலையில் மனைவி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணா ரெட்டி(44). இவரது மனைவி ரம்யா கிருஷ்ணா(38). இந்த தம்பதியினர் குண்டூர் கே.பி ஹெச்.பி காலனியில் வசித்து வந்தனர். ராமகிருஷ்ணா யூடியூப் சேனலில் பணியாற்றி வந்திருக்கிறார். இந்நிலையில் தம்பதிகள் தீராத கடன் சுமையால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இதன்படி கத்தியால் குத்தி தற்கொலை செய்து கொள்ளலாம் என்பது அவர்களின் திட்டமாக இருந்திருக்கிறது.

இந்நிலையில் தங்களை தாங்களே கத்தியால் குத்துவதற்கு பயந்த தம்பதி ஒருவரை ஒருவர் மாறி மாறி 17 முறை கத்தியால் குத்தி இருக்கின்றனர். இந்த தாக்குதலில் கணவர் ராமகிருஷ்ணா ரெட்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஆனால் மனைவி ரம்யா கிருஷ்ணா உயிரிழக்கவில்லை. மேலும் அவருக்கு தன்னைத்தானே குத்தவும் முடியவில்லை. இதனைத் தொடர்ந்து கணவரின் இறந்த உடலுடனே 2 நாட்கள் ரத்த வெள்ளத்தில் வாழ்ந்திருக்கிறார். உயிர் பிரியாததால் வலியால் அவதிப்பட்ட அவர் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.
இதையும் படிங்க: "அதிர்ச்சியை கிளப்பும் 6 பக்க கடிதம்..." கழுத்தறுக்கப்பட்டு மகன் கொலை.!! பகீர் பின்னணி.!!
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உயிருக்கு போராடிய ரம்யா கிருஷ்ணாவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த ராமகிருஷ்ணா ரெட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் தற்கொலை கடிதம் கிடைத்திருக்கிறது. அதில் கடன் சுமையால் ஏற்பட்ட அவமானம் தாங்க முடியாமல் தற்கொலை செய்வதாக தம்பதி எழுதி இருக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இதையும் படிங்க: தீராத கடன் சுமை... விபரீத முடிவெடுத்த குடும்பம்.!! 3 பேர் பலி.!!