காஞ்சிபுரம் பொறியாளருடன் பழகிய நபர்களுக்கு கொரோனா தொற்று இல்லை! அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பு!



coronovirus

சீனாவில் உஹான் மாகாணத்தில் தொடங்கிய கொரோனோ வைரஸ் தற்போது உலக நாடுகள் பலவற்றிலும் பரவி வருகிறது. இதுவரை இந்நோயால் 4000க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்நோய் இந்தியாவிலும் பரவி இதுவரை 45 பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் தமிழகத்தில் உள்ள காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர் ஓமானிலிருந்து தமிழகம் திரும்பிய போது இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டது தெரியவந்ததையடுத்து அவரை சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் தனி பிரிவில் சிகிச்சை செய்து வருகின்றனர்.

Coronovieus

மேலும் அவரை சுற்றியிருந்த மக்களை சோதனை செய்துள்ளனர். அதன் படி முதலில் பொறியாளரின் மனைவிக்கு வைரஸ் தாக்கவில்லை என்ற தகவல் வெளியானது. இன்று அவரை சுற்றி உள்ள அனைவருக்கும் நோய் பரவவில்லை என்றும், பொறியாளருக்கு மட்டுமே இந்நோய் தொற்று இருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.