இந்தியா

இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு..! உறுதி செய்தது இந்திய அரசாங்கம்..! பீதியில் மக்கள்..!

Summary:

corono virus positive India reports first case in Kerala

உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் இந்தியாவிற்கும் வந்துவிட்ட அதிர்ச்சி செய்தியை உறுதி செய்துள்ளது இந்திய அரசாங்கம். சீனாவில் உள்ள உஹான் நகரில் இருந்து பரவியதாக கூறப்படும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 170 பேர் உயிர் இழந்துள்ளனர்.

7000 பேருக்கு மேல் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. உயிரை பறிக்கும் இந்த கொடிய வைரஸ் நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் இந்த வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது.

இந்நிலையில் சீனாவில் இருக்கும் இந்தியர்கள் தாய்நாடு திரும்பி வருகின்றனர். இதில், வைரஸ் பரவியதாக கூறப்படும் உகான் நகரில் இருக்கும் பல்கலைக்கழகத்தில் படித்துவந்த இந்தியாவின் கேரளாவை சேர்ந்த மாணவன் இந்தியா திரும்பிய நிலையில் அவரை பரிசோதித்தல் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் இவர்தான் என்பதை இந்திய அரசாங்கமும் உறுதி செய்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொடங்கியுள்ளது அனைவரையும் பீதியடைய வைத்துள்ளது.


Advertisement