15 நாளில் இந்தியாவில் பலமடங்கு உயர்ந்த கொரோனா பாதிப்பு.! 62-ல் இருந்து 257 மாவட்டங்கள் கொரோனாவால் பாதிப்பு.!



corono-increased-from-62-to-257-districts-in-15-days

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த அணைத்து நாடுகளும் போராடிவருகிறது. கொரோனவை குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்கும் பணிகளும் ஒருபுறம் நடந்துவருகிறது.

இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்தும் ஒருமுயற்சியாக பெரும்பாலான நாடுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்தியாவிலும் 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு மக்கள் தங்கள் வீடுகளிலையே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா வைரஸ் டெல்லியில் நடந்த மாநாட்டிற்கு பிறகு பல மடங்கு உயர்ந்துள்ளது.

corono

ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன் இந்தியா முழுவதும் வெறும் 62 மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பாதித்திருந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட அடுத்த 15 நாளில் 257 மாவட்டங்களுக்கு மின்னல் வேகத்தில் பரவி உள்ளது. நமது நாட்டில் 28 மாநிலங்களிலும், 8 யூனியன் பிரதேசங்களிலும் சேர்த்து மொத்தம் 718 மாவட்டங்கள் உள்ளன.

பிரதமர் அறிவித்த ஊரடங்கு உத்தரவு வரும் ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. ஆனால், இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதால் ஊரடங்கு நிறுத்தப்படுமா? அல்லது மீண்டும் தொடரப்படுமா என மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது.