கடந்த 24 மணிநேரத்தில் 40 உயிர்களை காவுவாங்கிய கொரோனா! இந்தியாவில் பலியானவர்களின் எண்ணிக்கை உயர்வு!



corono-dead-increased-in-india

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகநாடுகள் பலவற்றிலும் அசுரவேகத்தில் பரவி கோரத்தாண்டவமாடி வருகிறது. இத்தகைய கொடிய கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 16,98416பேர்  பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் மேலும் 102764 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில்  கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த பல நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியாமல் இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின்,  பிரான்ஸ் போன்ற நாடுகள் பெருமளவில் திணறி வருகின்றது. மேலும் நாளுக்கு நாள் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே செல்கிறது.

India

இந்நிலையில் இந்தியாவில் 7447 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்று வரை 199ஆக இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 40 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.இதனால் இந்தியாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 239ஆக உயர்ந்துள்ளது.