கொரோனா காலர் டியூன் குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா.? வெளியானது புகைப்படம்.!

Corono caller tune girl photo leaked


Corono caller tune girl photo leaked

சீனாவின் உஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது. இதுவரை 4000 கும் அதிமானோர் உயிர் இழந்துள்ள நிலையில் இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்து இந்திய அரசாங்கமும் மக்கள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்திவருகிறது. அதில் ஒன்றுதான் அனைவர் தொலைபேசியிலும் கேட்கும் கொரோனா காலர் டியூன். இந்த கொரோனா கலர் டியூன் பெருமளவில் ட்ரெண்டாகியுள்ளது.

இந்நிலையில் 38 நொடிகள் வரும் இந்த விழிப்புணர்வு ஆடியோவுக்கு குரல் கொடுத்தவர் யார் என தெரிய வந்துள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த ஸ்ரீப்ரியா என்பவர்தான் இந்த கொரோனா காலர் ட்யூனுக்கு குரல் கொடுத்துள்ளார். எர்ணாகுளம் காந்தி நகர் பகுதியில் உள்ளே டெலிகிராம் ஸ்டோரில் ஜூனியர் அக்கவுண்ட்ஸ் ஆபிசராக ஸ்ரீப்ரியா பணியாற்றி வருகிறாராம் இந்த ஸ்ரீப்ரியா.

இவர் ஏற்கனவே BSNLசேவையிலும் குரல் கொடுத்துள்ளார். தற்போது ஜியோ, ஏர்டெல் உட்பட அணைத்து தொலைபேசி சேவைகளிலும் இவரது குரல் ஒலித்துவருகிறது.