இந்தியா

அசுர வேகத்தில் பரவும் கொரோனா! இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்வு!

Summary:

Corono affected people in india

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் தற்போது வல்லரசு நாடுகள் உட்பட 190 நாடுகளில் தீவிரமாக பரவி கோரதாண்டவமாடி வருகிறது. மேலும் இந்த கொடூர கொரோனா வைரஸால் இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் பிரான்ஸ் போன்ற நாடுகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழப்புகளின்  எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்து வருகிறது. மேலும் பல நாடுகளும் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல நாடுகளிலும் முழுஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வீட்டிலேயே அனைவரும் தனித்திருக்க வேண்டும். அத்தியாவசிய தேவைகள் இன்றி யாரும் வெளியே செல்லக் கூடாது எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்

இந்நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 693 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு,   பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4067ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 1445 பேர் டெல்லி சமய மாநாட்டில் கலந்து கொண்டவர்கள். மேலும் 109 பேர் உயிரிழந்துள்ளனர். 290 பேர் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்துள்ளனர்.

 


Advertisement