தமிழகம் இந்தியா மருத்துவம் டெக்னாலஜி Covid-19

கொரோனாவுக்கு ஒரு விடிவுகாலம் வர போகுது!! இனி வீட்டிலையே சுயமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளலாம்!!

Summary:

இனி வீட்டிலையே சுயமாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும் விதமாக ஆன்டிஜன் டெஸ்ட் என்ற கருவிக்கு

இனி வீட்டிலையே சுயமாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ளும் விதமாக ஆன்டிஜன் டெஸ்ட் என்ற கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) ஒப்புதல் வழங்கியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதேநேரம் கொரோனவால் உயிரிழப்பும் தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது. தமக்கு கொரோனா இருக்காது என நினைப்பது, கொரோனா அறிகுறிகளை கண்டுகொள்ளாமல் விடுவது, பரிசோதனைக்கு பயந்து பரிசோதனை மேற்கொள்ளாமல் இருப்பது போன்ற காரணங்களால் நமக்கே தெரியாமல் நமது உடலில் கொரோனா வைரஸ் பல்கி பெருகி நாளடைவில் பெரிய ஆபத்துகளை விளைவிக்கிறது.

இதுபோன்ற பெரிய ஆபத்திற்கு காரணமே உடனே பரிசோதனை செய்துகொலாமல் இருப்பதுதான். தற்போது கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவேண்டுமானால் அரசு மருத்துவாமனைகள் அல்லது தனியார் லேபுக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனாலயே பலரும் பரிசோதனை மேற்கொள்ள பயப்படுகின்றனர்.

இந்நிலையில் கொரோனா அறிகுறி இருந்தால் இனி நாமே வீட்டில் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள புது வசதி வந்துவிட்டது. ஆம், மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த மைலேப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதை விரைந்து கண்டறியும் ரேபிட் ஆன்டிஜன் டெஸ்ட் என்ற கருவியை கண்டுபிடித்துள்ளது.

ஒரு பரிசோதனை கருவியின் விலை 250 ரூபாய். 15 நிமிடங்களுக்குள் பரிசோசனை முடிவுகளை தெரிந்துகொள்ள முடியும். மூக்கில் இருந்து சளி மாதிரியை எடுத்து இந்த கருவி மூலம் நமக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா, இல்லையா என தெரிந்துகொள்ள முடியும்.

இக்கருவியின் பயன்பாட்டுக்கு ஐ.சி.எம்.ஆர்., அனுமதி வழங்கிஉள்ளநிலையில் இந்த கருவி விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement