இந்தியா Covid-19

முழு ஊரடங்கு அமல்படுத்தியும் ஒரேநாளில் 48 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று.! தத்தளிக்கும் பெங்களூரு.!

Summary:

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. கர்நாடக மாநிலத்

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை வேகமெடுத்து வருகிறது. கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் உச்சத்தில் உள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அம்மாநிலத்தில் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் அங்கு கொரோனா வைரஸ் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் தொடர்ந்து வேகமெடுத்து வருகிறது. 

கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 48 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தலைநகர் பெங்களூருவில் மட்டும் 26,756 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது பெங்களூருவில் மட்டும் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2.5 லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது. 

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 217 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அம்மாநிலத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 15 ஆயிரத்து 523 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அங்கு தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் நாளை 18-வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போட முடியாது என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. 


Advertisement