இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது! மொத்த பலி எண்ணிக்கை எவ்வளவு?

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கியது! மொத்த பலி எண்ணிக்கை எவ்வளவு?


corona increased in india

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கிவிட்டது. இதில் மகாராஷ்டிராவில் மட்டும் 70 ஆயிரம் பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 5,598 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த கொடூர வைரஸானது இந்தியாவிலும் பரவதொடங்கியது. இதனால் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த 98 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் 5-வது கட்டமாக நோய் கட்டுபாட்டு பகுதியில் இந்த மாதம் 30-ந் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்தது. மற்ற பகுதிகளில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது.

corona

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,98,706 ஆகவும், பலியானவர்களின் எண்ணிக்கை 5,598 ஆகவும் உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,98,706 பேரில், 70,013 பேர் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். 2-வது இடத்தில் உள்ள தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 24,586 ஆக உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து 95,527 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 97,581 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.