இந்தியாவை மீண்டும் மின்னல் வேகத்தில் மிரட்டும் கொரோனா.!! கடந்த 24 மணி நேரத்தில் 325 பேர் உயிரிழப்பு.!corona increased in india

உலக நாடுகளை அச்சுறுத்திவந்த கொரோனா பரவல் சமீப காலமாக ஓரளவிற்கு கட்டுக்குள் வந்தநிலையில், கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரஸாக உருமாறி பரவ தொடங்கி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் ஓரளவிற்கு கட்டுக்குள் வந்தநிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 90,928 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 19,206 பேர் குணமடைந்துள்ளனர். அதேபோல் கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 325 பேர் உயிரிழந்துள்ளனர்.