இந்தியா Corono+

கொரோனா வைரசுக்கான நடவடிக்கைகளில் சிறந்த நாடு அறிவிப்பு! கெத்து காட்டும் இந்தியா!

Summary:

Corona action best country

உலக நாடுகளில் கொரோனா வைரசுக்கான நடவடிக்கைகளில் மற்ற நாடுகளைவிட இந்தியா சிறப்பாக செயலபட்டு இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் உகான்  நகரில் தொடங்கியகொரோனா வைரஸ் தொற்றால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1லட்சத்தை கடந்துவிட்டது.கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பரவல் பரவியது. பிரதமர் மோடி சரியான நேரத்தில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கை அமல்படுத்தினார். டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களால் கொரோனா பரவல் இந்தியாவிலும் சற்று அதிகரிக்க தொடங்கியது.


உலகநாடுகள் கொரோனா  வைரஸ் பாதிப்புக்கு எவ்வாறு நடவடிக்கை எடுத்து வருகின்றன என்பது குறித்து ஆக்ஸ்போர்டு  பல்கலைக்கழக கொரோனா கண்காணிப்பு குழு நடத்திய ஆய்வில்  உலக நாடுகளில்  கொரோனா வைரசுக்கான நடவடிக்கைகளில் மற்ற நாடுகளைவிட இந்தியா சிறப்பாக செயலபட்டு இருப்பதாக தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கான  நடவடிக்கைகளில் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், தென் கொரியா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா கொரோனா வைரசுக்கான நடவடிக்கைகளில்
சிறந்ததாக விளங்குகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.


Advertisement