இது அவர்களுக்கு செய்யும் துரோகம்.! மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் விமர்சனம்.!

இது அவர்களுக்கு செய்யும் துரோகம்.! மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் விமர்சனம்.!


Congress Critique of the Federal Budget

பாராளுமன்றத்தில் இன்று 2022-23 ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பின்னர் 2-வது முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதில் 5 ஜி வசதி, டிஜிட்டல் கரன்சி, ஒரே நாடு-ஒரே பத்திரப்பதிவு, வருமான வரி உச்ச வரம்பு, நெடுஞ்சாலை திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் இடம்பெற்றிருந்தன.

ஆனால் இந்த பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ள நிலையில், மக்கள் நலனுக்கான எந்தவொரு திட்டமும் அறிவிக்கப்படவில்லை என காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்த நிலையில், மத்திய பட்ஜெட் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளரும், தலைமை செய்தித் தொடர்பாளருமான ரந்தீப் சுர்ஜேவாலா அவரது ட்விட்டர் பக்கத்தில், மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமனும், பிரதமர் நரேந்திர மோடியும்  நாட்டின் சம்பளக்காரர்கள் மற்றும் நடுத்தர வகுப்பினருக்கான எந்த நிவாரணத்தையும் அறிவிக்காமல் துரோகம் இழைத்துள்ளனர். 

இன்றைய பட்ஜெட்டை  நத்திங் பட்ஜெட் என்று கூறியதுடன், ஏழைகள், சம்பளம் வாங்குபவர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு பாக்கெட் காலியாக உள்ளது என்றும்,  செலவினங்களை அதிகரிப்பதற்கும் சிறுதொழில்துறையை மேம்படுத்துவதற்கும் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

கிரிப்டோ கரன்சிகள் சட்டப்பூர்வமானதா என்பது தெளிவாகத் தெரியாத நிலையில், அரசு எவ்வாறு லாபத்திற்கு வரி விதிக்கிறது என்று நிதி அமைச்சரே, தயவுசெய்து தேசத்திற்கு பதில் சொல்லுங்கள் என குறிப்பிட்டுள்ளார். 

பிரதமரும், மத்திய நிதி மந்திரியும் தங்கள் நடவடிக்கைள் மூலம் ஊதியக் குறைப்பு மற்றும் உயர் பணவீக்கம் காரணமாக சம்பளம் பெறுவோர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை ஏமாற்றியுள்ளனர். இது அவர்களுக்கு செய்யும் துரோகம் என குறிப்பிட்டுள்ளார்.