நடு ரோட்டில் கல்லூரி மாணவர்கள் மோதல்..! வைரலாகும் வீடியோ.. உ.பி.யில் பரபரப்பு..!!

நடு ரோட்டில் கல்லூரி மாணவர்கள் மோதல்..! வைரலாகும் வீடியோ.. உ.பி.யில் பரபரப்பு..!!


college-students-clash-in-the-middle-of-the-road-viral

உத்தர பிரதேசத்தில் கல்லூரி மாணவர்களுக்குள் காரை கொண்டு மோதியும், அடிதடியிலும் ஈடுபட்ட வீடியோ காட்சி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தில்  உள்ள காஜியாபாத் நகருக்கு உட்பட்ட மசூரியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வரும் மாணவர்கள் அவர்களுக்குள் தாக்கிக்  கொண்டனர். அவர்கள் ரோட்டில்  திடீரென ஒருவரை ஒருவர் அடித்து கொள்ளும்போது, கார் ஒன்று வேகமாக வந்து மாணவர்கள் மீது மோதி நிற்கிறது. 

அதன்பின்னரும், சண்டை தொடர்ந்து நடந்துள்ளது. கார் மோதி கீழே விழுந்த மாணவர் எழுந்ததும், அவரை சிலர் தாக்கும் காட்சிகளும் வீடியோவாக வெளிவந்து பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மற்ற மாணவர்கள் இதை பார்த்து அங்கிருந்து அலறி அடித்து ஓடுகின்றனர். 

தாக்குதலில் ஈடுபட்ட ஒரு சில மாணவர்களை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து சென்று உள்ளனர். இதுகுறித்து காஜியாபாத் எஸ்.பி. இராஜ் ராஜா கூறும்போது, சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்துள்ளோம். இந்த மோதலில் சம்மந்தப்பட்ட மற்ற மாணவர்களை தேடி வருகிறோம். 

மேலும், மாணவர்கள் மீது மோதிய காரை பறிமுதல் செய்துள்ளோம். பிற விசயங்கள் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி நடைபெறும். கல்லூரியை சுற்றி காவல்துறையினரின் ரோந்தை அதிகரித்துள்ளோம் என்று கூறியுள்ளார்.