புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
கல்லூரி மாணவி 6 பேர் கும்பலால் கூட்டுப்பாலியல் பலாத்காரம்; நண்பனை நம்பிச் சென்றபோது நடந்த பயங்கரம்.!
பண்டிகை நாளில் நண்பருடன் வெளியே சென்ற இளம்பெண் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த விசயத்திற்கு நண்பரும் உடந்தையாக இருந்த கொடுமை அம்பலமாகி இருக்கிறது.
ஒடிஷா மாநிலத்தில் உள்ள கட்டக் பகுதியில் செயல்பட்டு வரும் கல்லூரியில், இளம்பெண் ஒருவர் படித்து வருகிறார். இவருடன் படிக்கும் மாணவர், மாணவியுடன் பழக்கத்தை ஏற்படுத்தி நட்பாக பழகி வந்துள்ளார்.
இதையும் படிங்க: #Breaking: அப்படிப்போடு.. வங்கக்கடலில் உருவாகிறது புயல்; இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!
இதனிடையே, சம்பவத்தன்று மாணவியை தன்னுடன் அழைத்துச் சென்றவர், தனது நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் ஒரு 18 வயதுக்குள் இருக்கும் சிறுவனும் அடங்குவார்.
கூட்டுப்பாலியல் பலாத்காரம்
6 பேராக சேர்ந்து இளம்பெண்ணிடம் அத்துமீறியவர்கள், பலாத்காரம் தொடர்பான செயலை வீடியோ எடுத்து வைத்து மிரட்டி அனுப்பியுள்ளனர். இதனால் பயந்துபோன இளம்பெண்ணும், கொடுமையை வெளியே சொல்ல இயலாமல் தவித்து இருக்கிறார்.
இந்த விஷயத்தை தனக்கு சாதகமாக்கிய கும்பல், இளம்பெண்ணை மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்துள்ளது. ஒருகட்டத்தில் இவர்களின் செயல்பாடுகளை பொறுக்க இயலாத பெண்மணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
குற்றவாளிகள் 6 பேர் கைது
புகாரை ஏற்ற காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், அதனைத்தொடர்ந்து குற்றவாளிகள் 6 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களின் செல்போனும் கைப்பற்றப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற தசரா பண்டிகையின்போது, இளம்பெண்ணை அழைத்த நண்பர் தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து பெண்ணிடம் அத்துமீறியது விசாரணையில் அம்பலமானது.
இதையும் படிங்க: "புள்ள ஒரு வாய் சோறு தான் கேட்டுச்சு.." 6 வயது மகனை அடித்து கொன்ற தந்தை.!! கொடூர சம்பவம்.!!