புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
"புள்ள ஒரு வாய் சோறு தான் கேட்டுச்சு.." 6 வயது மகனை அடித்து கொன்ற தந்தை.!! கொடூர சம்பவம்.!!
கர்நாடக மாநிலத்தில் சாப்பாடு கேட்டு அழுத மகனை தந்தை அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த கொடூர சம்பவம் தொடர்பாக தலைமறைவாக இருக்கும் தந்தையை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
குடும்ப தகராறு
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் திப்பேஷ். இவருக்கு திருமணமாகி கௌரம்மா என்ற மனைவியும் மஞ்சுநாத் என்ற 6 வயது மகனும் இருந்தனர். இந்நிலையில் கணவன் மற்றும் மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு நிகழ்ந்து வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக கணவர் திப்பேஷ் தனது மனைவியை அடிக்கடி கொடுமை செய்து வந்திருக்கிறார்.
சாப்பாடு கேட்டு அழுத மகன்
இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று இவர்களது மகன் மஞ்சுநாத் தனக்கு சாப்பாடு வேண்டும் என தாயிடம் கேட்டு அழுதிருக்கிறார். அந்த நேரத்தில் வீட்டில் சாப்பாடு இல்லாததால் பக்கத்து வீட்டில் சாப்பாடு வாங்குவதற்காக சென்று இருக்கிறார் கௌரம்மா. இந்நிலையில் அவர் சாப்பாடு வாங்கி விட்டு வீடு திரும்பிய போது மகன் மயக்கமடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதையும் படிங்க: 8 ஆண்டுகளை நிறைவு செய்யும் பணமதிப்பிழப்பு நடவடிக்கை; நினைவிருக்கா மக்களே?
தந்தையே அடித்து கொலை செய்த கொடூரம்
இதனைத் தொடர்ந்து அவரது மகனை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் சாப்பாடு கேட்டு மஞ்சுநாத் தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் அவரது தந்தையே கொடூரமாக அடித்து கொலை செய்தது தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து தலைமறைவாக உள்ள தந்தையை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்த 7ம் வகுப்பு மாணவர்; பதறவைக்கும் சம்பவம்.. உண்மையை மறைக்கும் பள்ளி நிர்வாகம்?