விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த மாணவி! தனியறையில் அரங்கேறிய சோகம்!
விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த மாணவி! தனியறையில் அரங்கேறிய சோகம்!

ஐதராபாத் மாநிலத்தை சேர்ந்த லிங்கா என்பவரின் மகள் விஜயா என்ற இளம்பெண் தனியார் பொறியியல் கல்லூரியில் தங்கி படித்து வருகிறார். இவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இந்தநிலையில் இவர் வீட்டில் உள்ள அவரது அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இதனைப்பார்த்த அவரது பெற்றோர் கதறி அழுதுள்ளனர். பின்னர் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விஜயாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையில் விஜயாவின் சகோதரர் ரகுமா புகார் ஒன்று கொடுத்துள்ளார். அதில் நரேஷ் என்கிற இளைஞர் தன்னுடைய சகோதரிக்கு தொடர் தொல்லை கொடுத்து வந்ததாகவும், தற்கொலை செய்துகொள்வதற்கு முன்தினம் இரவு சகோதரிக்கு போன் செய்ததாகவும் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.