இந்தியாவை உளவுபார்க்க இலங்கை வருகிறதா சீனாவின் உளவுக்கப்பல்?..! இந்தியாவின் கண்டனத்தை கண்டுகொள்ளாத சீனா.!

இந்தியாவை உளவுபார்க்க இலங்கை வருகிறதா சீனாவின் உளவுக்கப்பல்?..! இந்தியாவின் கண்டனத்தை கண்டுகொள்ளாத சீனா.!


china-spy-ship-srilanka-tomorrow-will-arrive

இலங்கையில் உள்ள ஹம்பந்தோட்ட துறைமுகத்திற்கு, நாளை (ஆகஸ்ட் 11-ம் தேதி) சீன இராணுவத்துடைய உளவுக்கப்பல் யுவான் வாங் 5 வருகிறது. இக்கப்பல் 17 ஆம் தேதி வரை இலங்கை துறைமுகத்தில் இருக்கும். இந்த உளவு கப்பல் இலங்கைக்கு வர இந்தியா கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

யுவான் வாங் 5-ல் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை, உளவு பார்ப்பதற்கு என பிரத்தியேக அமைப்புகள் போன்றவை இருப்பதாக கூறப்படுகிறது. இதனை வைத்து 750 கி.மீ தூரம் வரையில் உளவு பார்க்கலாம். இக்கப்பல் இலங்கை வந்தடைந்தால் கல்பாக்கம், கூடங்குளம் அணுசக்தி நிலையங்களும் உளவு பார்க்கப்படலாம். 

china

இந்தியாவின் கடும் எதிர்பால் இலங்கை அரசு சீனாவிடம் உளவுக்கப்பல் வருகையை தள்ளிவைக்க கோரிக்கை விடுத்திருந்த நிலையில், சீனா தனது அதனை கண்டித்து இருந்தது. நாளை காலையில் 9 மணிக்கு சீன உளவுக்கப்பல் இலங்கையை வந்தடையும். 

அக்கப்பல் எரிபொருள் நிரப்பவே இலங்கை வருகிறது என சீனா தெரிவித்தாலும், இந்திய படைகள் உஷார் நிலையில் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள ஹம்பந்தோட்ட துறைமுகம் 2107-ல் சீனாவின் உதவியுடன் அமைக்கப்பட்டது என்பதும், அத்துறைமுகத்தை 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.