இந்தியா

கொரோனா சிகிச்சைக்காக இந்தியாவில் உடனடி மருத்துவமனை கட்டித்தருகிறோம்..! சீனா அறிவிப்பு.!

Summary:

China ready to build fastest hospital in india

கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த சீனாவில் குறுகிய காலத்தில் மிகப்பெரிய மருத்துவமனை கட்டப்பட்டதுபோலவே, இந்தியாவிலும் அதுபோன்ற ஒரு மருத்துவமனையை கட்டித்தர சீனா தயாராக இருப்பதாக சீனா கூறியுள்ளது.

சீனாவின் உஹான் நகரில் இருந்து வேகமாக பரவ தொடங்கிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு ஒரு வாரத்தில் 1600 படுக்கை வசதிகளை கொண்ட அதிநவீன மருத்துவமனை ஒன்றை கட்டியது. சீன ரெயில்வே கட்டுமான கழகம் இந்த பணியை 10 நாட்களில் முடித்தது.

தற்போது இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில், அதுபோன்ற ஒரு மருத்துவமனையை இந்தியாவில் கட்டித்தர சீனா தயாராக இருப்பதாக கூறியுள்ளது. ஆனால் இந்தியா கேட்டுக் கொண்டால் மட்டுமே இவ்வாறு மருத்துவமனை கட்டிக் கொடுக்க முடியும் என்றும், அதற்கான சப்ளை பொருட்கள் தடையின்றி கொண்டு செல்லவும் இந்தியா ஏற்பாடு செய்யவேண்டும் எனவும் சீன அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

உலக அளவில் உள்ள மிகப்பெரிய கட்டுமான நிறுவனங்களில் சீனாவின் ரெயில்வே கட்டுமான கழகமும் ஓன்று என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement