தமிழகம் இந்தியா

சென்னை வந்துள்ள சீன அதிபருக்கு இப்படி ஒரு ஆசையா? அதனால்தான் இந்த ஏற்பாடுகளா?

Summary:

China presitent going via road reasons leaked

சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னைக்கு வருவதை ஒட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாட்டுக்குள் செய்பட்டுள்ளது. சீன அதிபரை சந்தித்து பேசவும், பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கவும் இந்திய பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார்.

இந்நிலையில் சென்னை வந்துள்ள சீனா அதிபர், கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் இருந்து சாலை வழியாக மகாபலிபுரம் செல்கிறார். முதலில் ஹெலிகாப்டர்கள் மூலம்தான் மகாபலிபுரம் செல்ல முடிவு செய்யப்பட்டிருந்தது.

ஆனால், சீன அதிபர் தான் சாலை வழியாகத்தான் செல்லவேண்டும் என தனது ஆசையை இந்தியாவிடம் கூறியுள்ளார். ஹெலிகாப்டர் மூலம் சென்றால் சென்னையில் உள்ள சாலைகள் மற்றும் உள்கட்டமைப்புகளை பார்க்க முடியாது என்பதால்தான் தான் சாலை வழியாக செல்ல சீன அதிபர் ஆசைப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால்தான் அவசர அவசரமாக மகாபலிபுரம் செல்லும் சாலைகள் சுத்தப்படுத்தப்பட்டு சாலையில் உள்ளே ஸ்பீடு பிரேக்கர்கள் அனைத்தும் எடுக்கப்பட்டு சாலையின் இருபுறங்களிலும் வரவேற்பு பலகைகள் வைக்கப்பட்டன.


Advertisement