ஒமிக்ரான் வகை வைரஸ் Silent Killer.. 25 நாட்கள் ஆகியும்.., உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி..!

ஒமிக்ரான் வகை வைரஸ் Silent Killer.. 25 நாட்கள் ஆகியும்.., உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி..!


Chief Justice India Supreme Court NV Ramana Says Omicron is a Silent Killer Virus

மாறுபாடுகொண்ட ஒமிக்ரான் வரை வைரஸ் அமைதியான கொலையாளி என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார். 

இந்திய உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பணியாற்றி வருபவர் நீதியரசர் என்.வி ரமணா. இவர் கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த முதல் அலையிலேயே பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த விசயம் தொடர்பாக நீதியரசர் என்.வி ரமணா தெரிவிக்கையில், "கொரோனா முதல் அலையில் நான் அதன் பிடியில் சிக்கினேன். அப்போது கஷ்டப்பட்டாலும், 4 நாட்களில் குணமடைந்தேன். எனது உடல்நிலை சீரானது. 

Chief Justice

ஆனால், தற்போதைய மாறுபாடு அடைந்த ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். இந்த அலையில் நான் சிக்கி 25 நாட்கள் ஆகியுள்ளன. ஆனால், இன்னும் உடலளவில் பல கஷ்டத்தை உணர்கிறேன். இது ஒரு அமைதியான கொலையாளி (Silent Killer)" என்று தெரிவித்தார்.