கட்டாய திருமணம்! திடீரென முதலிரவு முடிந்த காதலி வீட்டிற்குள் புகுந்த காதலன்! 3 வருஷமா நாங்க லவ் பன்றோம்.... புதுமாப்பிள்ளையிடம் காதலன் காட்டிய அந்த புகைப்படம்! அடுத்த நொடி எடுத்த அதிரடி முடிவு..!!!!



chhattisgarh-bride-lover-entry-reception-cancelled

சத்தீஸ்கர் மாநிலத்தில் திருமணமான இரண்டே நாளில் நடந்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனேந்திரகர் பகுதியில் மணமகளின் வீட்டில் நடந்த வரவேற்பு ஏற்பாடுகளின் போது இளைஞர் ஒருவர் திடீரென வந்து காதல் விவகாரத்தை வெளிப்படுத்தியதால் இரு குடும்பங்களும் அதிர்ச்சியடைந்தன. இறுதியில் வரவேற்பு நிகழ்ச்சியே ரத்து செய்யப்பட்டது.

வரவேற்பு வீட்டில் திடீர் திருப்பம்

தகவலின்படி, கடந்த மே 6-ம் தேதி இளம்பெண் ஒருவருக்கு உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. அதன்பின் மணப்பெண் புகுந்த வீட்டிற்கு சென்ற நிலையில், அங்கு திருமண வரவேற்பு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்துகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது வீட்டிற்குள் வந்த இளைஞர் ஒருவர், “கடந்த 3 ஆண்டுகளாக நாங்கள் காதலித்து வந்தோம். எங்களைப் பிரித்துதான் இந்தத் திருமணம் நடத்தப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். இதனால் அங்கு இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதையும் படிங்க: ஒரே நேரத்தில் ஒரு மணப்பெண்ணை மேளதாளங்களுடன் திருமணம் செய்ய வந்த 2 மாப்பிள்ளைகள்! கடைசியில் பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி.... இறுதியில் அரங்கேறிய விசித்திரம்..!!!

புகைப்படங்கள் காட்டியதால் மோதல்

தன்னிடம் மணமகளுடன் எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இருப்பதாக அந்த இளைஞர் கூறியதுடன், சில ஆதாரங்களையும் காட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து இரு குடும்பத்தினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

நிலைமை பரபரப்பாக மாறியதால் விவகாரம் போலீஸ் நிலையம் வரை சென்றது. நள்ளிரவு 2 மணி வரை நடந்த பேச்சுவார்த்தையிலும் அந்த இளைஞர், “அவருடன் தான் வாழ விரும்புகிறேன்” என்ற நிலைப்பாட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.

மணமகன் எடுத்த முடிவு

இதற்கிடையில், மணமகளின் பழைய உறவு குறித்து தகவல் மறைக்கப்பட்டதாக கூறி மணமகன் கடும் அதிருப்தி தெரிவித்தார். “இனி இவருடன் வாழ முடியாது” என்று திட்டவட்டமாக கூறிய அவர், வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்படாது என அறிவித்ததாக தெரிகிறது.

இதையடுத்து மணப்பெண் தனது பெற்றோருடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். காதலரின் திடீர் வருகையால் திருமண வீடு முழுவதும் பரபரப்பாக மாறிய சம்பவம் தற்போது அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.

 

இதையும் படிங்க: சென்னை விடுதியில் சாவி துவாரம் வழியாக ஊழியர்கள் கண்ட அந்த அதிர்ச்சி! நள்ளிரவில் நடந்த பயங்கரம்!!!