இருளில் தவிக்கும் சண்டிகர் மக்கள்.. மின்வாரிய தனியார்மயமாக்கல் எதிர்ப்பு போராட்டத்தால் இருட்டு.!
இருளில் தவிக்கும் சண்டிகர் மக்கள்.. மின்வாரிய தனியார்மயமாக்கல் எதிர்ப்பு போராட்டத்தால் இருட்டு.!

மின்வாரியத்தை தனியாருக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து, சண்டிகர் நகரில் மின்வாரிய ஊழியர்கள் திங்கட்கிழமை முதலாக போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இதனால் சண்டிகர் நகரின் பெரும்பாலான பகுதிகள் மின்னிணைப்பு இல்லாமல் இருளில் மூழ்கிய நிலையில், 2 நாட்களாக மின்சார சேவைகள் வழங்கப்படவில்லை.
இதனால் அடிப்படை விஷயங்கள் முதல் குடிநீர் விநியோகம் என ஒவ்வொன்றும் பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகளில் சிக்னல் இயங்காமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இரவுகளில் மெழுகுவர்த்தியை ஏற்றி வைத்தவாறு பொதுமக்கள் இன்னலை சந்தித்து வருகின்றனர். மேலும், மருத்துவமனைகளில் நடைபெறும் முக்கிய ஆபரேஷன் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
36 மணிநேரமாக குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் சண்டிகரில் மக்கள் பரிதவித்து வரும் நிலையில், அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ள ஹரியானா, பஞ்சாப் நீதிமன்றம் தலைமை பொறியாளர்களை நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.