#Breaking: ஆஸ்கரில் மிகப்பெரிய அதிர்ச்சி.. இந்திய படங்கள் தேர்வு இல்லை.. ஷாக் தகவல்.!
தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் நேரடி வகுப்புகள் அனுமதி கிடையாது - அதிரடி அறிவிப்பு.!
இந்தியாவில் பரவிய கொரோனா வைரஸின் தாக்கத்தை குறைக்க மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வந்தது. மாநில அரசுகள் பல்வேறு விழிப்புணர்வை முன்னெடுத்து, மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறது.
சமீபத்தில் 12 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த ஆணை பிறப்பிக்கப்பட்ட நிலையில், சண்டிகரில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத குழந்தைகளுக்கு நேரடி வகுப்புகளில் கலந்துகொள்ள அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டால் மட்டுமே பள்ளிகளில் நடைபெறும் நேரடி வகுப்புகளுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் அரிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணாக்கர்களின் பெற்றோர் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த தேவையான நடவடிக்கையை எடுத்துள்ளனர்.