கேரளாவிற்கு வந்த அடுத்த சோதனை !! கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போன கதை

கேரளாவிற்கு வந்த அடுத்த சோதனை !! கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போன கதை



central-govt-denies-frund-from-foriegn-govts

கனமழை மற்றும் வெள்ளத்தால் கேரள மாநிலம் வரலாறு காணாத பாதிப்பை சந்தித்துள்ளது. 400 பேர் வரை பலியாகியுள்ளனர்.

லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக அங்கு மழை குறைந்துள்ளதால் தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது.

kerala flood

இந்த நிலையில் வெளியுறவு கொள்கைகளை காரணமாக காட்டி கேரளாவிற்கு வரும் வெளிநாட்டு அரசுகளின் நிதி உதவிகளை மத்திய அரசு வாங்க மறுக்கும் சம்பவம் மேலும் வேதனை அளிக்கும் வண்ணமாக உள்ளது.

மாநிலத்தின் 14 மாவட்டங்களும் வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்தது. 370 பேர் மழைக்கு பலியானார்கள். சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்தன. 3 லட்சம் விவசாயிகள், 45 ஆயிரத்து 988 ஹெக்டேர் விவசாய நிலங்கள் மண் மூடி சேதமானது.

இப்படி மாநிலம் முழுவதும் மழை வெள்ளம் ஏற்படுத்திய சேதம் சுமார் ரூ.20 ஆயிரம் கோடிக்கும் அதிகம் என்று மாநில அரசின் முதல்கட்ட கணக்கெடுப்பு கூறுகிறது.

kerala flood

வெளிநாடுகளிடமிருந்து கேரள வெள்ளத்துக்கு நிதியுதவி வாங்குவது குறித்து கேரள அரசுக்கும் மத்திய அரசுக்கும் முரண்பாடு வந்துள்ளது

வெளிநாடுகள் அளிக்கும் நிதி உதவிகளை மத்திய அரசு வழியாகவே வாங்க வேண்டும். தற்போது ஐக்கிய அரபு அமீரகம் ரூ.700 கோடி நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த நிதியை பெற வேண்டுமானால் மத்திய அரசு அனுமதி கொடுக்க வேண்டும். இதற்கும் மத்திய அரசு உதவ வேண்டும் என்று கேரளா வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஆனால், தற்போது நடைமுறையில் உள்ள வெளியுறவு கொள்கைகள் பிற நாடுகளின் அரசுகள் நேரடியாக அளிக்கும் நிவாரண நிதிகளை வாங்குவதில் சில கட்டுப்பாடுகள் உள்ளது. 

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளார் ராவேஷ் குமார் கூறுகையில், ’பேரிடர் நிவாரண நிதியாக மற்ற நாட்டு அரசுகள் அளிக்கும் நிதியுதவியை பெறக்கூடாது எனும் கொள்கையை கடந்த 2013-ம் ஆண்டு உத்தராகாண்ட் மாநிலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சமயத்தில் முந்தைய காங்கிரஸ் அரசு ஏற்படுத்தியுள்ளது.

எனவே, வெளிநாட்டு அரசுகளின் நிதி உதவிகளை ஏற்பது இல்லை என்ற கொள்கை காரணமாக வெளிநாடுகளில் வசிக்கும் தன்னார்வலர்கள் அல்லது தொண்டு நிறுவனங்கள் அளிக்கும் தனிப்பட்ட நிதியுதவியை மட்டுமே இந்திய அரசால் பெற்றுக்கொள்ள முடியும். 

அதன் அடிப்படையில் தற்போது கேரள வெள்ள நிவாரணமாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ள ரூ.700 கோடி, கத்தார் அறிவித்துள்ள ரூ.35 கோடி மற்றும் மாலத்தீவுகள் அறிவித்துள்ள ரூ.35 லட்சம் நிவாரண நிதியை அரசால் பெற்றுக்கொள்ள முடியாது என்று விளக்கமளித்துள்ளது.