இந்தியா

ஹைதராபாத் வெள்ளத்தின் கோரக்காட்சி..! 2 மணி நேரத்தில் சரசரவென அதிகரித்த தண்ணீர்! வைரல் வீடியோ.

Summary:

ஹைதராபாத்தில் பெய்துவரும் கனமழையால் ஹைதராபாத் நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது.

ஹைதராபாத்தில் பெய்துவரும் கனமழையால் ஹைதராபாத் நகரமே வெள்ளக்காடாக மாறியுள்ளது.

வரலாறு காணாத வகையில் ஹைதராபாத் நகரில் பெய்துள்ள கனமழையால் ஒட்டுமொத்த நகரமும் வெள்ளநீரில் மூழ்கியுள்ளது. வெள்ளநீரில் வாகனங்கள் அடித்துச்செல்லப்பட்டு, வீடுகளில் நீர் புகுந்து இதுவரை பலகோடி ரூபாய் சொத்துக்கள் நாசமாகியுள்ளது.

மேலும் கடுமையான வெள்ளத்தால் இதுவரை 50 முதல் 60 பேர் வரை உயிரிழந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சில இடங்களில் நாள் முழுவதும் 150 மி. மீ க்கும் அதிகமான கனமழை பொழிந்ததால் போக்குவரத்துக்கு முற்றிலும் தடைபட்டுள்ளது.

இந்நிலையில் சாதாரணமாக மக்கள் நடமாடிக்கொண்டிருந்த பரபரப்பான சாலை ஒன்று சில மணிநேரங்களில் தண்ணீரில் மூழ்கும் வீடியோ காட்சி ஒன்றை தி நியூஸ் மினிட் இணையதளம் வெளியிட்டுள்ளது. அந்த காட்சிகள் வெள்ளத்தின் கோரத்தை காட்டும் சாட்சியாக அமைந்துள்ளது.

சில மணி நேரங்களில் வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்து அந்த பகுதியே வெள்ளக்காடாக மாறுகிறது. வீட்டில் உள்ள பொருட்கள் வெள்ளநீரில் மிதக்கும் காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.


Advertisement