இந்தியா

சிறுத்தையை எதிர்த்து நெஞ்சை நிமிர்த்தி கம்பீரமாக நேருக்கு நேர் மோதும் பூனை.! இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ.!

Summary:

கிணற்றில் சிறுத்தையை எதிர்த்து பூனை சண்டையிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

கிணற்றில் சிறுத்தையை எதிர்த்து பூனை சண்டையிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

மஹாராஷ்டிர மாநிலம் நாசிக் அருகே உள்ள கிராமத்தில் பூனை ஒன்றை சிறுத்தை துரத்தி சென்றுள்ளது. அப்போது பூனை கிணற்றின் சுவரின் விளிம்பில் நின்று கொண்டிருந்தது. அப்போது பூனையை  துரத்திச் சென்ற சிறுத்தை தவறுதலாகக் கிணற்றுக்குள் விழுந்தது. 

பின், பூனை நின்ற சுவரின் விளிம்புக்கு வந்த சிறுத்தை பூனையைப் பிடிக்க முயன்றது. அப்போது, அந்தப் பூனை சிறுத்தையை எதிர்த்து நெஞ்சை நிமிர்த்தி கம்பீரமாக நின்று நேருக்கு நேர் மோதுவதுபோல் எதிர்த்துள்ளது. 

இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதுகுறித்து நாசிக் மேற்கு மண்டல துணை வனப் பாதுகாவலர் பங்கஜ் கர்க் கூறுகையில், பூனையைத் துரத்திய சிறுத்தை கிணற்றுக்குள் விழுந்து சிக்கிக் கொண்டது. பின்னர் வனத்துறையினர் சிறுத்தையை மீட்டு காட்டுக்குள் விட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.


Advertisement