இந்தியா

தறிகெட்டு ஓடி 4 பேர் மீது பாய்ந்த கார்... சிசிடிவியில் சிக்கிய முக்கிய தகவல்..! போலீசார் தீவிர விசாரணை..!

Summary:

தறிகெட்டு ஓடி 4 பேர் மீது பாய்ந்த கார்... சிசிடிவியில் சிக்கிய முக்கிய தகவல்..! போலீசார் தீவிர விசாரணை..!

வேகமாக வந்த கார் சாலையில் உள்ள இருசக்கர வாகனங்களில் மோதி, 4 பேர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியரில் தான்சென் சாலையில் கார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனங்களின் மீது கார் வேகமாக மோதிய நிலையில், சாலையில் சென்ற 4 பேர் மீது மோதி நிற்காமல் சென்றுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த 4 பேரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பின் இந்த விபத்து தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது விபத்துக்காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானதை தொடர்ந்து, காரின் எண் மூலமாக காவல்துறையினர் கார் ஓட்டியவரை அடையாளம் கண்டுள்ளனர்.


Advertisement