இந்தியா

திடீரென தோன்றிய பள்ளம்!! கண்ணிமைக்கும் நொடியில் நீரில் மூழ்கிய கார்.. அதிர்ச்சி வீடியோ

Summary:

பார்க்கிங்கில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென தோன்றிய பள்ளத்தில் மூழ்கிய வீட

பார்க்கிங்கில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் ஒன்று திடீரென தோன்றிய பள்ளத்தில் மூழ்கிய வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

மும்பையின் மேற்கு பகுதியான காட்கோபரில் உள்ள ராம் நிவாஸ் சோஷைட்டி பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பார்க்கிங்கில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் அதன் அடியில் தோன்றிய திடீர் பள்ளாத்தால் நீரில் மூழ்கியுள்ளது.

அந்தப்பகுதியில் இருந்த கிணற்றை கான்கிரேட் தளம் கொண்டு மூடி இருந்தநிலையில், அந்த பகுதியை பார்க்கிங் செய்வதற்காக அந்த குடியிருப்பு வாசிகள் பயன்படுத்திவந்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் பெய்த மழையினால் கிணறு பாழடைந்தநிலையில் அந்த பகுதியில் ஏற்பட்ட திடீர் நீரூற்றினால் பள்ளம் தோன்றி அதனுள் கார் மூழ்கியுள்ளது.

அதிர்ஷ்டவசமாக காரில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இதனை அடுத்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த பகுதியை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது.


Advertisement