கொரோனா இருமல் அலர்ட் காலர் டியூன் தமிழில் ஒலிக்குமா? அரசுக்கு கோரிக்கை விடுத்த சமூக ஆர்வலர்கள்!

கொரோனா இருமல் அலர்ட் காலர் டியூன் தமிழில் ஒலிக்குமா? அரசுக்கு கோரிக்கை விடுத்த சமூக ஆர்வலர்கள்!



Caller tune coronovirus

முதலில் சீனாவை மட்டும் அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த நோயால் இதுவரை பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும் 4000க்கும் அதிகமானோர் பேர் உயிரிழந்துள்ளனர். 

 
இந்தியாவில் இதுவரை 45 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கி இருப்பதால் நாடு முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

corono

கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த மொபைல் போன்களில் காலர் டியூனாக இருமல் அலர்ட்டுடன் கூடிய எச்சரிக்கை செய்திகள் ஏற்ப்பட்டுத்தியுள்ளனர் சுகாதார துறை அதிகாரிகள். ஆனால் அந்த காலர் டியூன் முழுவதும் ஆங்கிலத்தில் வருவதால் சிலருக்கு அதை பற்றிய தகவல் தெரியாமல் போய் விடுகிறது. 

எனவே காலர் டியூனை அந்தந்த பிராந்திய மொழிகளில், கேட்கும்படி மாற்ற வேண்டும் என அரசுக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.