நடுரோட்டில் 90 லட்சம் பணத்தை வாரி வீசி ஊர்வலமாக சென்ற வாலிபர்! காரணத்தை கேட்டா ஷாக்காகிருவீங்க!

நடுரோட்டில் 90 லட்சம் பணத்தை வாரி வீசி ஊர்வலமாக சென்ற வாலிபர்! காரணத்தை கேட்டா ஷாக்காகிருவீங்க!



business man throw money while marriage

குஜராத் ஜாம்நகரில் சேலா என்ற கிராம பகுதியில் வசித்து வருபவர் ரிஷிராஜ்சிங் சடேசா. இவர் ஏராளமான தொழில்களை மேற்கொண்டு மாபெரும் தொழிலதிபராக உள்ளார். மேலும் எப்பொழுதும் ஆடம்பரமாக இருக்கக்கூடிய அவர் தனது ஆடம்பரமான வாழ்க்கையினை சமூகவலைத்தளம் மூலமாக விளம்பரப்படுத்திக்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளார்

இந்நிலையில் அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு மிகவும் ஆடம்பரமாக திருமணம் நடைபெற்றுள்ளது. அதனை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் சேலா பகுதி சாலையில் மாப்பிள்ளை ஊரவலமாக அழைத்துச் செல்லப்பட்ட போது 10 ரூபாய் முதல் 2000 ரூபாய் நோட்டு வரை சாலைகளில் வீசப்பட்டுள்ளது.மேலும் பணமழையில் நனைந்தவாறு மணமக்கள் ஊர்வலம் அப்பகுதியில் ஊர்வலம் சென்றுள்ளனர். மேலும் இவ்வாறு சாலையில் வாரி இறைக்கப்பட்ட தொகை 90 லட்சம் ஆகும்.

90 lakhs

அதனை தொடர்ந்து ஊர்வலம் முடிந்த பிறகும் மணமக்கள் ஹெலிகாப்டர் மூலம் மண்டபத்திற்கு சென்றுள்ளனர். அங்கு தொழிலதிபரின் அண்ணன் அவர்களுக்கு 1 கோடி ரூபாய் மதிப்புள்ள காரினை பரிசாக வழங்கியுள்ளார். இந்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.