வங்கக்கடலில் உருவானது புல்புல் புயல்!! தமிழகத்தில் கனமழை! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

bulbul cyclone formed rain in tamilnadu


bulbul-cyclone-formed-rain-in-tamilnadu

வங்கக்கடலில் அந்தமான் நிக்கோபார் பகுதிகளில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக உருவெடுத்து உள்ளது. மேலும் பாகிஸ்தானால் புல்புல் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 மேலும் புல்புல் புயல் மேற்கு வங்கத்தில் சாகர்  தீவிலிருந்து 830 கிலோ மீட்டர் தொலைவிலும், ஒடிஷா பாரதீப் துறைமுகத்திலிருந்து 730 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. மேலும் இந்த புயல் கடலின் வடமேற்கு திசையில் நகர்ந்து  மேற்கு வங்காளம்,  பங்களாதேஷ் போன்றவற்றை நோக்கிச்செல்லும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . 

bul bul cycloneமேலும் இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், மீனவர்கள் யாரும் அந்தமான் கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் புல்புல் புயல் கரையைக் கடக்கும் போது வங்க கடல் பகுதியில் 70 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கரமான சூறைக் காற்று வீசும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.